கபசுர குடிநீர் / Kabasura Kudineer
1. சுக்கு (Zingiber officinale - Dried)
2. திப்பிலி (Piper Longum)
3. லவங்கம் (Cloves / Syzygium Aromaticum)
4. சிறுகாஞ்சொறி வேர் (Roots of Urtica L)
5. அக்கரகாரம் (Anacyclus pyrethrum)
6. முள்ளிவேர்
7. கடுக்காய்த் தோல் (Terminalia chebula)
8. ஆடாதொடா இலை (Justicia adhatoda)
9. கற்பூரவள்ளி இலை (Coleus amboinicus)
10. கோஷ்டம் (Saussurea costus)
11. சீந்தில் கொடி (Tinospora Cadifolia)
12. சிறு தேக்கு (Clerodendrum Viscosum)
13. நிலவேவம்பு சமூலம் (Andrograhis Paniculata)
14. வட்டத்திருப்பி வேர் (பாடக்கிழங்கு) (Cissampelos pareira)
15. முத்தக்காசு (கோரைக்கிழங்கு) (Cyperus rotundus)
15 மூலிகைகளையும் சம அளவு தலா 1 பலம் (~35 கிராம்) எடுத்து, முறைப்படி சுத்தம் செய்து, பொடித்து, நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும். கபசுர குடிநீர் தயார்.
1 பங்கு குடிநீர் சூரணத்துடன் 8 பங்கு தண்ணீர் சேர்ந்து காய்ச்சி, எட்டில் ஒன்றாய் குறுக்கி வடிகட்டி, குடிநீர் எடுத்துக் கொள்ளவும். 30 மி.லி. வீதம், தினமும் 2 அல்லது 3 வேளைகள் கொடுக்கலாம். துணை மருந்தாக தேவைப்படின் மற்ற மருந்துகளையும் கொடுக்கலாம். இதன் மூலம் கபசுரம் நீங்கும்.
5 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் இக்குடிநீரை மருத்துவரின் பரிந்துரையின்படி வழங்கலாம். தற்காப்புக்காக 3 முதல் 5 நாட்கள் மட்டும் ஒரு நாளைக்கு 2 வேளை முதல் 3 வேளை வரை பருகலாம். நோய் வந்த பின்னர் மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்தவேண்டும். வெறும் வயிற்றில் பருகினால் நல்லது. வயிற்றில் புண் உள்ளவர்கள் வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது. நோய் ஏதேனும் இருப்பின், மருத்துவரின் ஆலோசனைப்படி உணவு உண்ணுவதற்கு முன்னரோ அல்லது பின்னரோ அருந்தலாம்.
குடிநீரை அப்போதைக்கு அப்போது மட்டும் புதிதாக செய்து பயன்படுத்தவேண்டும். குடிநீரை 3 மணி நேரத்துக்கு பின் பயன்படுத்த வேண்டாம். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், டைபாய்டு காய்ச்சல், அல்சர், வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் முதல் 3 மாதங்களுக்கு குடிக்காமல் இருப்பது சிறந்தது. நாள்பட்ட நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்பேரில் மட்டுமே குடிக்ககவும்.
நிலவேம்புக் குடிநீர்/NILAVEMBU KUDINEER
தேவையானப் பொருட்கள்
1. நிலவேம்பு (Andrograhis Paniculata)
2. வெட்டிவேர் (Chrysopogon zizanioides)
3. விலாமிச்சை வேர் (Plectranthus Vettiveroides)
4. சந்தனம் (Santalum album)
5. கோரைக்கிழங்கு (Cyperus rotundus)
6. பேய்ப்புடல் (Trichosanthes Cucumerina)
7. பற்படாகம் (Mollugo cerviana)
8. சுக்கு (Zingiber officinale - Dried)
9. மிளகு (Piper Nigrum)
தயாரிக்கும் முறை
மேற்குறிப்பிட்ட 9 பொருட்கள் ஒவ்வொன்னையும் சம அளவு பொடித்து கலந்து எடுத்துக் கொள்ளவேண்டும்.
இதன் பொடியுடன் 8 மடங்கு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து, அதை 4 மடங்காகச் சுண்ட வைத்து ஆற விட்டு இளஞ்சூட்டில் அருந்த வேண்டும்.
(எடுத்துக்காட்டாக, 5 கிராம் நிலவேம்புக் குடிநீர்ப் பொடியோடு 200 மில்லி தண்ணி சேர்த்து, அது 50 மில்லியாகச் சுண்ட வைக்கவும்.)
அருந்தும் முறை
நிலவேம்புக் குடிநீர, இளஞ்சூடாக குடிப்பதுதான் நல்லது. அதுவும் தயாரித்த 3 மணி நேரத்தில் குடித்து விட வேண்டும்.
தயார் செய்த நிலவேம்புக் குடிநீரை, மறுநாள் வரை ஃபிரிட்ஜில் வைத்துக் குடிக்கக் கூடாது.
அளவு
காலையும் இரவும் உணவுக்கு முன் 30 மில்லி நிலவேம்புக் குடிநீரை அருந்தவும்.
வயதைப் பொருத்து நிலவேம்புக் குடிநீரை ஒரு நாளைக்கு 10 மி.லி முதல் 50 மி.லி வரை குடிக்கலாம்.
குழந்தைகளும், கர்ப்பிணிப் பெண்களும் மருத்துவரின் ஆலோசனையப் பெற்று குடிக்கவும்.
தீரும் நோய்கள் : அனைத்து விதமானக் காய்ச்சல்.
வாத சுரக் குடிநீர்
தேவையானப் பொருட்கள்
1. பெருகாஞ்சொறி
2. திப்பிலி மூலம்
3. சித்திரமூலம்
4. சங்கன் வேர்
5. வெள்ளருகு
6. நிலவேம்பு
7. முருக்கம் வித்து
8. கழற்சி வேர்
9. பேரரத்தை
10. கண்டங்கத்திரி
11. பேராமுட்டி
12. சிற்றரத்தை
13. மாவிலங்கம் வேர்
14. சிறுகாஞ்சொறி
15. சதகுப்பை
16. விஸ்ணுகிரந்தி
17. சிறுதேக்கு
18. சுக்கு
19. திப்பிலி
20. செவ்வியம்
21. கோட்டம்
பயன்படுத்தும் அளவு:
குடிநீர்
5 கிராம் பொடியை 250 மி.லி. தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து அதை 30 மி.லி. ஆக வற்றவைக்க வேண்டும்.
அளவு:
30 மி.லி. முதல் 60 மி.லி. வரை உணவுக்கு பின் உட்கொள்ளலாம்.
(அல்லது ) மருத்துவரின்அறிவுரையின் படி எடுத்துக் கொள்ள வேண்டும்.
தீரும் நோய்கள்:
வாத சுரம், நடுக்கு வாதம்
பித்த சுரக் குடிநீர்
தேவையானப் பொருட்கள்
1. விலாமிச்சம் வேர்
2. சிறுகாஞ்சொறி
3. வில்வ வேர்
4. பாதிரி வேர்
5. அதிமதுரம்
6. கோட்டம்
7. நன்னாரி வேர்
8. நிலவாரை
9. கொத்தமல்லி விதை
10. தும்பை வேர்
11. பேரிச்சை
12. ஆனை திப்பிலி
13. நெல்லிக்காய் வற்றல்
14. சுக்கு
15. சீரகம்
பயன்படுத்தும் அளவு:
குடிநீர் :
35 கிராம் பொடியை 3 லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து அதை 350 மி.லி. ஆக வற்றவைக்க வேண்டும்.
மருந்து அளவு:
30 மி.லி. முதல் 60 மி.லி. வரை உணவுக்கு பின் காலை மற்றும் மாலை உட்கொள்ள வேண்டும்.
(அல்லது) மருத்துவரின் அறிவுரையின் படி எடுத்துக் கொள்ள வேண்டும்.
தீரும் நோய்கள்:
அழல் சுரம்/ பித்த சுரம்.
Nice
ReplyDelete