நத்தை சதை நெய்
நத்தைச் சதை - 20 பலம்
சித்திரமூலம் - 1 பலம்
நாட்டு அமுக்கிரா கிழங்கு - 1 பலம்
வசம்பு - 1 பலம்
கடுக்காய் - 1 பலம்
தான்றிக்காய் - 1 பலம்
நெல்லிக்காய் - 1 பலம்
ஜாதிக்காய் - 1 பலம்
மாசிக்காய் - 1 பலம்
சீந்தில் சர்க்கரை - 1 பலம்
நிலவேம்பு - 1 பலம்
நாவல் - 1 பலம்
வேப்பம் பட்டை - 1 பலம்
ஊழலாத்திப் பட்டை - 1 பலம்
சிறுகுறிஞ்சான் வேர் - 1 பலம்
எள்ளுக்காய் தோல் - 1 பலம்
சிவப்பு நாயுருவி அரிசி - 1 பலம்
பசு நெய் - 1 படி
பால் - 1 படி
ஆகிய கடைச் சரக்குகளை ஒன்றிரண்டாக இடித்து நான்குபடி நீரிட்டு , ஒருபடியாகக் காய்த்து வடித்ததில், நத்தைச்சதை, பால் நெய் இவற்றை கூட்டிச் சிறுதீயால் எரித்துக் கடுகுபோல் திரண்டு வரும்போது வடித்தெடுக்கவும் . இதனில் ஒரு உச்சிக்கரண்டி அளவு காலை மாலை கொடுத்து வர கல்லீரல் நோய்கள் குணமாகும். இது மூலத்திற்கு சிறந்த மருந்து.
மூலத்திற்கு சிறந்த மருந்து Zinc எனப்படும் துத்தநாகம் ஆகும். அசைவ உணவுகளிலேயே நத்தை மற்றும் சிப்பியில்தான் துத்தநாகச் சத்து மிகுந்துக் காணப்படுகிறது. ஆகையால் மூலத்திற்கு இது சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
No comments:
Post a Comment