- வெசிகுலர் சுவாசம் அல்லது இயல்பான சுவாசம் ( Vesicular Breathing)
- மெல்லிய விரிசல் ஒலி (Fine Crackles - Rales)
- கரடுமுரடான விரிசல் (ரேல்ஸ்) / Coarse – Crackles (Rales)
- ஈளை / Wheeze
- ரோஞ்சி - குறை சுருதி ஈளை / Rhonchi – Low Pitched Wheezes
- மூச்சுக்குழாய் மூச்சு ஒலிகள் / Bronchial Breath Sounds
- நுரையீரல் உறைத் தேய்வு / Pleural Rubs
- மூச்சுக்குழாய் நுரையீரல் ஒலிகள் / Bronchovesicular Lung Sounds
2. மெல்லிய விரிசல் ஒலி (FINE CRACKLES - RALES)
நுரையீரல் ஒலியின் விரிசல் அல்லது ரேல்ஸ் என்றும் அழைக்கப்படும் நுண்ணிய விரிசல் ஒலியானது, காலங்கடந்து மூச்சை உள்ளிழுக்கும் போது உணரப்படும் ஒலியாகும். இது நாம் கேட்கும் அடிப்படை நுரையீரல் ஒலிகளில் ஒன்றாகும். கூந்தல் உரசும் ஒலியைப் போல் இது உணரப்படும்.
சில வெளியேற்றுப் பொருட்கள் அல்லது திரவத்தால் இந்த காற்றுப்பாதைகள் சிதைந்து விடுவதால், சிறிய நுண்ணறைகள் அல்லது காற்றுப்பாதைகளில் மெல்லிய விரிசல் ஒலி எழுகின்றது.
மெல்லிய விரிசல்களை விட கரடுமுரடான
விரிசல்கள் குறைந்த சுருதி உள்ளவையாக இருக்கும், மற்றும் ஒப்பீட்டளவில் இதன்
ஒலி மிகையாக இருக்கும். இவை மூச்சை உள்ளிழுக்கும் துவக்க நிலையில் கேட்கப்படுகின்றன. இந்த ஒலி கரகரப்பாகவும் உறுதியாகவும் கேட்கும். இது நீண்ட நேரம் நீடிக்கும். மூச்சுக்குழாய் அடைப்பு, நுரையீரல் வீக்கம், மூச்சுக்குழாய் அழற்சி போன்றவற்றின் விளைவாக நுரையீரலில்
கூடுதல் நீர்மம் குவிவதை அவை காட்டுகின்றன. இவை, பெரிய சுவாச இடைவெளிகள்
அல்லது மூச்சுக்குழாய்களில் ஏற்படும் நோயின் விளைவாக ஏற்படும் விளைப்பாடாகும்.
நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் / Chronic obstructive pulmonary disease (COPD) போன்ற நோய்களில், பெரிய மூச்சுக்குழாய்களில் உள்ள சளி கரடுமுரடான ஒலி விரிசல்களை ஏற்படுத்தும். கரடுமுரடான ஒலி விரிசல்கள் பருவமடைந்தோருக்கான சுவாசக் கோளாறு நோய்க்குறியின் / Adult respiratory distress syndrome (ARDS) அறிகுறியாக இருக்கலாம். இருமல் கரடுமுரடான ஒலி விரிசல்களின் தரத்தை சற்றே மாற்றும், ஆனால் அவை முற்றிலும் மறைந்துவிடாது.
ஈளை என்பது ஒரு வகையான விசில் ஒலி ஆகும். இது மூச்சுக்குழாய்களின் சுருக்கம் மற்றும் வீக்கத்தால் ஏற்படுகிறது. சுவாசம் மற்றும் சுவாசக் கட்டங்களின் போது இவ்வொலியை நாம் கேட்க முடியும். காற்று இடைவெளிகளில் சில வகையான தடைகள் ஏற்படுவதையோ அல்லது இந்த இடைவெளிகள் குறுகுவதையோ, இவ்வொலி குறிக்கிறது. இது ஒரு நோயியல் ஒலி ஆகும். ஆஸ்துமா மற்றும் நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் / Chronic obstructive pulmonary disease (COPD) போன்ற தீவிர சுவாச நோய்களின் போது இவ்வொலி மிகவும் பொதுவானதாகும். அந்நேரத்தில் சரியான முறையில் நோயை அனுகி சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். இந்நிலைக்கு, இசை அல்லது ஒலியெழுப்பும் பண்பு உள்ளது. ஒரு நபர் சுவாசிக்கும்போது அவருடைய மூச்சு விசில் அடிப்பது போல் உணரப்படும். மூச்சை வெளியேற்றும் போதும் மற்றும் சில சமயங்களில் உள்ளிழுக்கும் போதும் அதிக சுருதியுடன் கொண்ட ஒலி கேட்கும்.
ரோஞ்சி (ரொஞ்சஸின் பன்மை) என்பது குறைந்த சுருதி கொண்ட ஈளை ஒலியாகும். இவ்வொலி இயல்பாக கரடுமுரடாகவும் ஒலியெழுப்பும் தன்மையும் கொண்டது. மூச்சுக்குழாயின் காற்றுவழிகளில் ஏற்படும் இயல்பற்ற சில சுரப்புகளால் ஏற்படும் அடைப்பு அல்லது தடுப்புகளால் இவ்வொலி உண்டாகிறது. ரோஞ்சி குறட்டை ஒலியை ஒத்திருக்கிறது. நாள்பட்ட நிரந்தர மூச்சுக்குழாய் அழற்சி, நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் / Chronic obstructive pulmonary disease (COPD), நிமோனியா, மூச்சுக்குழாய் அழற்சி அல்லது சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் போன்ற சுவாசக் கோளாறுகளின் போது ரோஞ்சி ஒலியைக் கேட்கலாம்.
இன்ட்ரா தொராசிக் காற்றுப்பாதைகளில் அடைப்பு அல்லது தடுப்பு ஏற்பட்டால், அது மூச்சுவெளிவிடும் ரோஞ்சியாக இருக்கும். ரோஞ்சியில் இரண்டு வகைகள் உள்ளன. அதிக சுருதி கொண்ட ரோஞ்சி சிபிலண்ட் ரோஞ்சி என்றும், குறைந்த சுருதி கொண்ட ரோஞ்சி சோனரஸ் ரோஞ்சி என்றும் அழைக்கப்படுகின்றன. இருமல் ரோஞ்சியின் தன்மையை மாற்றுகிறது.
மூச்சுக்குழாய் சுவாச ஒலிகள் இயல்பானவை. இவ்வொலியின் ஒலிகேட்பு மூச்சுக்குழாய்க்கு மேலே நிகழ்கிறது. இவ்வொலிகள் இயல்பானவை என்றாலும், நுரையீரலின் சில பகுதிகளில் அவற்றின் இயல்பான நிலையிலிருந்து மாறுபட்டு அதைக் கேட்கும்போது அது ஒருங்கிணைக்கப்படுகிறது. நிமோனியா அல்லது நுரையீரல் சுருக்கத்தில் இவ்விதமான ஒருங்கிணைப்பு நிகழ்கிறது.
இந்த நிலைமைகள் நுரையீரல் திசுக்களை அடர்த்தியாக்குகின்றன. சில நேரங்களில் பொதுவாக வெசிகுலர் ஒலிகள் கோட்கும் நுரையீரலின் புறப் பகுதிகளில் மூச்சுக்குழாய் சுவாச ஒலிகளையும் நாம் கேட்கலாம். இவ்வொலியின் மூச்சு விடும் நேரம் நீண்டதாகவும் ஒலி மிகுந்தும் உள்ளது ஆரோக்கியமான நிலையில், இந்த விதமான ஒலிகளை, நாம் மூச்சுக்குழாய் போன்ற பெரிய காற்று இடைவெளிகளுக்கு மேலே மட்டுமே கேட்க முடியும். மூச்சுக்குழாய் ஒலிகள் அதிக அதிர்வெண் கூறுகளைக் கொண்டிருக்கின்றன.
இது இயல்பற்ற நுரையீரல் ஒலி ஆகும். நுரையீரல் உறையின் அடுக்குகள் ஒன்றாக தேய்வதினால் அங்கு வீக்கம் ஏற்படும் போது இந்த ஒலி கேட்கிறது. இயற்கையில் இது கடுமையானது. மூச்சு உள்வாங்கல் மற்றும் வெளிவிடல் ஆகிய இரண்டு நிலைகளின் போதும் இவ்வொலியை நாம் கேட்கலாம். இதன் சுருதி குறைவாக இருக்கும்.
நுரையீரல் அழற்சி, நுரையீரல் தக்கையடைப்பு, வீரியம் மிக்க நுரையீரல் உறை நோய் போன்ற சுவாச நோய்களில் இவ்வொலி பொதுவானது. நுரையீரலின் உறை அடுக்குகளுக்கு இடையில் ஒரு குறுகிய திரவம் உள்ள இடத்தில், நுரையீரல் உறைக்குழி உள்ளது. இந்த இடத்தில் வீக்கம் ஏற்பட்டாலோ அல்லது அவற்றுக்கிடையேயான உயவு இல்லாதபோதும், நாம் இவ்வொலியைக் கேட்கலாம். மேலும் அவ்விடத்தில் வலியும் உணரப்படலாம்.
மூச்சுக்குழாய் நுரையீரல் ஒலிகள் இயற்கையில் குழாய் ஒலியை ஒத்துள்ளன. மார்பின் பின்புற பகுதியில், பொதுவாக முன் மார்பின் மையப் பகுதிக்கும் ஸ்கேபுலேவுக்கும் இடையில் இந்த மூச்சுக்குழாய் நுரையீரல் ஒலிகளைக் கேட்கலாம். மூச்சுக்குழாய் நுரையீரல் ஒலிகளுடன் ஒப்பிடுகையில், மூச்சுக்குழாய் ஒலிகள் இயற்கையில் மென்மையானவை.
மூச்சுக்குழாய் ஒலிகளில், உள்ளிழுக்கும் மற்றும் வெளிவிடும் நிலைகள் சமமாக உள்ளன. மூச்சு வெளிவிடும் பொழுது, ஒலியின் சுருதி சற்றே வேறுபட்டு உள்ளது. இவை இயல்பான சுவாச ஒலிகள் ஆகும். நுரையீரல் பகுதி முழுவதும், குறிப்பாக மூச்சுக்குழாய் மற்றும் அல்வியோலிக்கு அருகில், ஒலிக்கேட்பு இருக்கும். இதன் சுருதி மிகையாகவும் இல்லாமல், குறையாகவும் இல்லாமல் நடுத்தரமாக உள்ளது. மூச்சுக்குழாய் மற்றும் வெசிகுலர் சுவாசத்திற்கு இடையே உள்ள இடைநிலை ஒலிகள் மூச்சுக்குழாய் ஒலிகள் ஆகும்.
ஆழமாக அறிந்து கொள்ள மிகவும் உதவியாக இருக்கிறது. நன்றி ஐயா.
ReplyDelete