மிளகின் மருத்துவப் பயன்கள்
மணமூட்டியாகவும் சுவையூட்டியாகவும் கரு மிளகு பயன்படுத்தப் படுகிறது. பொடுகுத் தொல்லையைப் போக்க ஸ்பா போன்ற பல மையங்களில் கரு மிளகு அல்லது வால் மிளகுத் தூள் பயன்டுத்தப் படுகிறது. இத்தூளை எலுமிச்சைச் சாறுடன் சேர்த்து தலைமுடி வேர்களில் தடவுவதன் மூலம், பொடுகுத் தொல்லை நீங்கி முடி பளபளப்புடன் காணப்படும்.
பல் சொத்தை, பல் வலி மற்றும் ஈறு வீக்கம் போன்ற வாய்வழி பிரச்சனைகளை எதிர்த்துப் போராடவும் மிளவு உதவுகிறது.
மிளகு, விட்டிலிகோ (Vitiligo) எனப்படும் வெண்குட்டத்தைப் போக்குகிறது. வெண்குட்ட நோயில் ஏற்படும் நிறமி இழப்பை, கருப்பு மிளகு மீட்டெடுத்து இந்நிலையைச் சீராக்குகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகள் போன்ற வயதான அறிகுறிகளை எதிர்த்துப் போராடவும் துணை புரிகிறது. தோல் வறட்சியின்றி நலமான தோலைப் பெற மிளகைப் பயன்படுத்தலாம். மிளகுத் தீநீர் ஒரு துடைப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது, இது தோலின் பளபளப்பைப் புதுப்பிக்க உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து உடல் பருமனை எதிர்த்துப் போராட உதவுகிறது.
இதில் உள்ள பிப்பரின் என்னும் ஆல்கலாய்டு, புற்றுநோய்ச் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது.
இது அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது.
இது கீல்வாத சிகிச்சைக்குப் பயன்படுத்தப் படுகிறது.
ஆஸ்துமா, இருமல் மற்றும் சளி போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு இது ஒரு நல்ல மூலிகை மருந்தாகும். சைனசிடிஸ் மற்றும் மூக்கடைப்புக்குப் பயனுள்ளதாக உள்ளது.
வயிற்றுப் பிரச்சனைகளை எதிர்த்துப் போராடவும் கருப்பு மிளகு உதவுகிறது. செரிமானமின்மை மற்றும் வாயுத்தொல்லைக்கு ஒரு பாரம்பரிய மருந்தாக மிளகு விளங்குகிறது.
மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற குடல் நோய்களுக்கு இது ஒரு நல்ல மூலிகை சிகிச்சையாகும்.
டையூரிசிஸ் எனும் சிறுநீர்ப் போக்கியாகவும் இது செயல்படுகிறது. பூச்சிக் கடிக்கு எதிர் மருந்தாகவும் பயன்படுகிறது.
எச்சரிக்கை: இதை உட்கொள்ளும் முன் மருத்துவரை அணுகவும்.
ஒற்றை மூலிகையாக மிளகின் மருத்துவப் பயன்
1. இருமலுக்கு கருமிளகு
3 கிராம் கருமிளகுத் தூளை ஒரு தேக்கரண்டி தேனுடன் கலந்து, இரவில் தூங்கும் முன் சாப்பிடவும். இதை உண்ட பிறகு எதையும் உண்ண வேண்டாம்.
5 நாட்களுக்கு இதை பின்பற்றவும்.
2. சளிக்கு கரு மிளகு
4 முதல் 5 கருப்பு மிளகுகளை மைய அரைத்து, ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு நாளைக்கு ஒரு முறை 3 நாட்களுக்கு மட்டும் சாப்பிடுங்கள்.
குறிப்பு: மிளகுத்தூள் தினமும் புதியதாக இருக்க வேண்டும்.
எச்சரிக்கை: ஒரு நேரத்தில் 3 நாட்களுக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.
3. தொண்டை வலிக்கு கரு மிளகு
ஒரு மேசைக்கரண்டி கருப்பு மிளகுப் பொடியை அதே அளவு சர்க்கரை மற்றும் நெய் சேர்த்து பசையாக்கி தூங்குவதற்கு முன் எடுத்துக் கொள்ளவும். அதன் பிறகு தண்ணீர் அருந்த்த வேண்டாம்.
4. தொண்டைக் கோளாறுக்கு கருமிளகு
பழுக்காத கருப்பு மிளகு பயன்படுத்தி உட்செலுத்தலை தயார் செய்யவும். தொண்டை கொப்பளிக்க இதைப் பயன்படுத்தவும்.
5. ஜலதோஷத்திற்கு கருமிளகு
3 முதல் 4 கருப்பு மிளகுகளை அரைத்தத்தூளாக்கி, அதனுடன் நறுக்கிய இஞ்சி துண்டுகள், 2 நொறுக்கப்பட்ட கிராம்பு, 3-4 துளசி இலைகள் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து ஒரு குடிநீரை தயார் செய்யவும். அதை வடிகட்டி, அதில் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்க்கவும். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை அருந்தவும்.
6. சைனசிடிஸுக்கு கருமிளகு
8 முதல் 10 கருப்பு மிளகை எரித்து ஒரு நாளைக்கு ஒரு முறை புகையை உள்ளிழுக்கவும்.
7. இரைப்பை குடல் அழற்சிக்கு கருமிளகு
கருப்பு மிளகுப் பொடி 2 சிட்டிகையை வெதுவெதுப்பான நீருடன், ஒரு நாளைக்கு இரண்டு முறை வீதம் 5 நாட்களுக்கு எடுத்துக் கொள்ளவும்.
8. வயிற்றுப் பிரச்சனைகளுக்கு கருமிளகு
20 கிராம் தயிரில் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் கருப்பு மிளகுத் தூள் சிறிது சேர்த்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிடவும்.
9. வாய்வுக்காக கருப்பு மிளகு
கருப்பு மிளகுடன் நல்லெண்ணெய் கலந்து, வயிற்றில் மசாஜ் செய்யவும்.
10. அனோரெக்ஸியாவுக்கு கருமிளகு
வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரப்பதை, கருப்பு மிளகு ஊக்குவிக்கிறது. ஹைட்ரோகுளோரிக் அமிலம் செரிமானத்தை மேம்படுத்தி பசியைக் கூட்டுகிறது.
1 டீஸ்பூன் வெல்லப் பொடியை அரை டீஸ்பூன் கருப்பு மிளகு தூளுடன் கலந்து தினமும் உட்கொள்ளவும்.
11. அரிப்புக்கு கருமிளகு
தேங்காய் எண்ணெய்யுடன் கருப்பு மிளகு தூளைச் சேர்த்து கலவையை சூடாக்கவும். இதை அரிக்கும் தோலில் தடவவும்.
12. ஆந்த்ராக்சுக்கு கருமிளகு
கால் தேக்கரண்டி கருப்பு மிளகுத் தூளில் தேன் சேர்த்து, தினம் மூன்று வேளை, 3 நாட்களுக்கு சாப்பிடவும்.
12. எக்ஸிமாவுக்கு கருமிளகு
ஒரு தேக்கரண்டி கருப்பு மிளகுத்தூளை கருமிளகாய் கருகி வரும் வரை பசு நெய்யில் வறுக்கவும். பாதிக்கப்பட்ட பகுதியில் இதைப் பயன்படுத்தவும்.
13. கரும்புள்ளிகளுக்கு கருப்பு மிளகு
50 கிராம் கருப்பு மிளகைப் பொடி செய்யவும். ஒரு தேக்கரண்டி கருப்பு மிளகுத் தூள் மற்றும் தயிர் சேர்த்து பசையாக்கி கரும்புள்ளிகள் மீது தடவி 20 நிமிடம் விட்டு, வட்ட இயக்கத்தில் தேய்த்து பின் கழுவவும்.
14. கண் நோய்களுக்கு கருமிளகு
2 சிட்டிகை கருப்பு மிளகுப் பொடியை சிறிது தெளிந்த வெண்ணெய் (நெய்) சேர்த்து கலந்து தினமும் சாப்பிடவும்.
15. ஈறு அழற்சிக்கு கருமிளகு
பொடித்த கருப்பு மிளகு 1 தேக்கரண்டி எடுத்து அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து பாதிக்கப்பட்ட ஈறுகளில் அதை தேய்க்கவும்.
16. பல் வலிக்கு கருமிளகு
ஒரு தேக்கரண்டி கருப்பு மிளகு தூள் எடுத்து ஒரு கப் தண்ணீரில் 5-6 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். ஆற விட்டு வடிகட்டி, வாய் கொப்பளிக்கப் பயன்படுத்தவும்.
மற்ற மூலிகைகளோடு மிளகின் மருத்துவப் பயன்கள்
ஆஸ்துமாவிற்கு மூலிகை மருத்துவம்
மருத்துவம் – 1
ஒரு மண் பானையில் முடக்கற்றான் இலைப் பொடியும், கத்திரிக்காய்ப் பொடியும் தலா 6 தேக்கரண்டி மற்றும் ஒரு சிறிய துண்டு பேரரத்தை வேர்
ஆகியவற்றைக் கலக்கவும். இதனொடு ஒரு தேக்கரண்டி சீரகம் 4 கருப்பு மிளகு மற்றும் ஒரு தேக்கரண்டி சுக்குப் பொடி சேர்க்கவும். இதில் 3 குவளை தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து ஒரு குவளையாகச் சுண்ட வைக்கவும்.
இக்குடிநீரில், ஒரு தேக்கரண்டி, ஒரு நாளைக்கு இரண்டு முறை எடுத்துக்
கொள்ளவும்.
மருத்துவம் – 2
வெள்ளெருக்கன் பூக்கள், கிராம்பு மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றை சம அளவு எடுத்து, அவற்றை ஒன்றாக அரைக்கவும். இக் கலவையை ஒரு சிட்டிகை வெதுவெதுப்பான நீரில் கலக்கவும். இந்த தண்ணீரை ஒரு நாளைக்கு ஒரு முறை குடிக்கவும்.
எச்சரிக்கை: அதிகமாகப் பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் இது வயிற்றுப்போக்கு அல்லது வாந்தியை ஏற்படுத்தும்.
மருத்துவம் – 3
வாழைப்பழத்தை நடுவில் இருந்து பிளந்து, கருமிளகுப் பொடியை நிரப்பி, ஒரு இரவு முழுவதும் வைத்திருந்துக் காலையில் சாப்பிடவும்.
மருத்துவம் – 4
வாழைத் தண்டுச் சாறு 200 மில்லி யுடன் 2 தேக்கரண்டி மிளகுத் தூள் சேர்த்து கலக்கவும். ஒரு நாளைக்கு இரண்டு முறை 2 தேக்கரண்டி அருந்தவும்.
மருத்துவம் – 5
6 மில்லி தேன், 8 கிராம் சுக்குப் பொடி மற்றும் 10 கிராம் பொடித்த மிளகு 50 மில்லி தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைத்து, ஒரு நாளைக்கு ஒரு முறை 20 மில்லி குடிக்கவும்.
மருத்துவம் – 6
1 தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன் அரை தேக்கரண்டி மிளகுத் தூள் மற்றும் 1 தேக்கரண்டி தேன் எடுத்துக் கொள்ளவும். ஒரு நாளைக்கு இரண்டு முறை 1
தேக்கரண்டி ஒரு எடுத்துக் கொள்ளவும்.
மருத்துவம் – 7
12 மிளகைப் பொடித்து அதனுடன், 4 கிராம்பு மற்றும் 12 துளசி இலைகளை 200 மில்லி தண்ணீரில் 15 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து, இந்தத் தீநீரை வடிகட்டி, 1 முதல் 2 தேக்கரண்டி தேன் கலந்து, ஒரு நாளைக்கு ஒரு முறை குடிக்கவும்.
இருமலுக்கு மூலிகை மருத்துவம்
மருத்துவம் – 1
ஒரு மண் பானையில் முடக்கற்றான் இலைப் பொடியும், கத்திரிக்காய்ப் பொடியும் தலா 6 தேக்கரண்டி மற்றும் ஒரு சிறிய துண்டு பேரரத்தை வேரைப் பொடித்துக் கலக்கவும்.
இதனொடு ஒரு தேக்கரண்டி சீரகம், 4 கருப்பு மிளகு மற்றும் ஒரு தேக்கரண்டி சுக்குப் பொடி சேர்க்கவும். இதில் 3 குவளை தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து ஒரு குவளையாகச் சுண்ட வைக்கவும்.
இக்குடிநீரில்,ஒரு தேக்கரண்டி, ஒரு நாளைக்கு இரண்டு முறை உட்கொள்ளவும்.
மருத்துவம் – 2
நாயுருவியின் (Achyranthes Aspera) உலர்ந்த வேரை நிழலில் உலர்த்தி இடித்துப் பொடித்து வைத்துக் கொள்ளவும். இப்பொடியுடன் (ஒரு சிட்டிகை) சம அளவு தேன் மற்றும் ¼ பங்கு கருமிளகுப் பொடி சேர்த்து, ஒரு நாளைக்கு மூன்று முறை உட்கொள்ளவும்,
மருத்துவம் – 3
மாம்பாஞ்சானின் (Aristolochia Indica) உலர்ந்த வேர்களை அரைத்துப் பொடி செய்து கொள்ளவும். 1 தேக்கரண்டி இப்பொடியுடன், 1/2 தேக்கரண்டி கருமிளகுப் பொடியைச் சேர்த்து வெதுவெதுப்பான நீரில் ஒரு நாளைக்கு ஒரு முறை எடுத்துக் கொள்ளுங்கள்.
மருத்துவம் – 4
மூன்று மிளகைப் பொடித்து அதனுடன் ஒரு சிட்டிகை பெருஞ்சீரகத் தூள் (Carum Carvi) மற்றும் உப்பு சேர்த்து அரைத்து உட்கொள்ளவும்.
ஜலதோஷம், இருமல் மற்றும் தொண்டை வலிக்கான மூலிகை மருத்துவம்
ஒரு தேக்கரண்டி கொள்ளை ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து அரைத்துப் பசையாக்கி ஒரு சிட்டிகை கருமிளகுத் தூள் சேர்த்துக் கலக்கவும். ஒரு நாளைக்கு 2 முறை உட்கொள்ளவும். வடிகட்டிய நீரையும் அருந்தலாம்.
தொண்டைப் புண், வலிக்கு மருத்துவம்
மருத்துவம் – 1
மிளகு, திப்பிலி, கொட்டை நீக்கிய தான்றிக்காய், பேரீச்சம்பழம், மற்றும் திராட்சை, ஆகியவற்றை சம அளவு சேர்த்து அரைத்து ஒரு மேசைக்கரண்டி விழுதுடன் அதே அளவு தேன் கலந்து ஒரு நாளைக்கு மூன்று முறை எடுத்துக் கொள்ளவும்.
இருமலுக்கும் இது சிறந்த மூலிகை மருத்துவமாகும் .
மருத்துவம் – 2
8 முதல் 10 பாதாம் எடுத்து இரவு முழுதும் ஊற வைத்து வெளிப்புறத் தோலை நீக்கி 1 கப் தண்ணீரில் 8 முதல் 10 கருப்பு மிளகுத்தூள் சேர்த்து அரைத்து சிறிது தேன் குழைத்து, ஒரு நாளைக்கு ஒரு முறை உட்கொள்ளவும்.
மூச்சுக் குழல் அழற்சிக்கு மருத்துவம்
மருத்துவம் – 1
சுக்குப் பொடி, மிளகுப் பொடி, மஞ்சள் பொடி மூன்றையும் சம அளவு கலந்து வைத்துக் கொள்ளவும். ஒரு நாளைக்கு இரண்டு முறை அரை தேக்கரண்டி வீதம் ஒரு வாரத்திற்கு வழுவழுப்பான நீருடன் உட்கொள்ளவும்.
மருத்துவம் – 2
சுக்கு, இலவங்கம், மிளகு ஆகியவற்றை சம அளவு ஒன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு நாளைக்கு மூன்று முறை ஒரு சிட்டிகை தேனுடன் சாப்பிடவும்.
இலவங்கம் மிளகு உலர்ந்த வெள்ளை எருக்கன் பூக்கள் 12 4 விகிதத்தில் பொடித்து கலந்து வைத்துக் கொள்ளவும் அதில் ஒரு நாளைக்கு ஒரு கிராம் வீதம் மூன்று வேளை வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ளவும்
மிளகு திப்பிலி சுக்கு மூன்றையும் சம அளவு எடுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும். அதில் ஒரு நாளைக்கு ஒரு கிராம் வீதம் மூன்று வேளை தேனுடன் உட்கொள்ளவும்.
காரம் இன்னும் தொடரும்
No comments:
Post a Comment