சீரகச் சூரணம்
200 கிராம் சீரகத்தை
200 கிராம் எலுமிச்சைச் சாறில் ஊறவைத்துக் காயவைத்துப் பிறகு
200 கிராம் கரும்புச் சாறில் ஊறவைத்துக் காயவைத்துப் பிறகு
200 கிராம் முசுமுசுக்கைச் சாறில் ஊறவைத்துக் காயவைத்துப் பிறகு
200 கிராம் நெல்லிச் சாறில் ஊறவைத்துக் காயவைத்துப் பிறகு
200 கிராம் தூதுவளைச் சாறில் ஊறவைத்துக் காயவைத்துப் பிறகு
200 கிராம் வேப்பம்பட்டைச் சாறில் ஊறவைத்துக் காயவைத்துப் பிறகு
200 கிராம் தும்பை இலைச் சாறில் ஊறவைத்துக் காயவைத்துப் பிறகு
சிறுதீயில் வறுத்துப் பொடித்து வைத்துக் கொள்ளவும்.
+
இப் பொடியுடன் சர்க்கரை ( நாட்டுச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு) 50 கிராம் பொடித்துக் கலக்கவும்
நீரிழிவு நோயாளிகள் சர்க்கரையைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
அளவு :- தினமும் 1-2 கிராம் (40 நாட்களுக்கு), உணவுக்குப் பின்
அனுபானம் :- தண்ணீர் / வெந்நீர்
தீரும் நோய்கள் :-
பித்த நோய்கள், தலை கிறுகிறுப்பு, வாந்தி, மயக்கம், அஜீரணம், வெப்பம், காங்கை தீரும்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதனுடன் சிறுகீரைத் தைலம் தேய்க்கவும்.
சிறுகீரைத் தைலம்
சிறுகீரைச் சாறு - 100 கிராம்
வல்லாரைச் சாறு - 100 கிராம்
சீரகம் - 200 கிராம்
மிளகு - 50 கிராம்
இதனுடன் ½ லிட்டர் நீர் கொதிக்க வைத்து வடிகட்டி வைக்கவும்.
இதனுடன் நல்லெண்ணெய் 250 கிராம், சிறுதீயில் கொதிக்க வைத்து ஆற வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தாளிசாதி சூரணம் (THALISATHI CHOORNAM)
தேவையான பொருட்கள்
தாளிசபத்திரி
தான்றிக்காய்
திப்பிலி
திப்பிலிக்க்ட்டை
இலவங்கப்பட்டை
இலவங்கப்பத்திரி
ஏலம்
சுக்கு
சீரகம்
கருஞ்சீரகம்
சதகுப்பை
சடாமஞ்சில்
சாதிபத்திரி
சாதிக்காய்
செண்பக மொக்கு
சிறுநாகப்பூ
அதிமதுரம்
பெருங்காயம்
நெல்லிக்காய்
கற்கடக சிங்கி
கடுக்காய்
கோட்டம்
ஓமம்
இலவங்கம்
மிளகு
வாய்விடங்கம்
கொத்தமல்லி (தனியா) விதை
சர்க்கரை அல்லது வெல்லம்
மேற்குறிப்பிட்ட பொருட்கள் ஒவ்வொன்னையும் சம அளவு பொடித்து கலந்து எடுத்துக் கொள்ளவேண்டும்.
அளவு
1 அல்லது 2 கிராம் உணவுக்குப்பின் காலை மாலை உட்கொள்ள வேண்டும்.
அனுபானம் ( துணை மருந்து)
பால் அல்லது நெய்யுடன்
தீரும் நோய்கள்
80 வகை வாதம்
40 வகை பித்தம்
96 வகை சிலேத்துமம்
வயிற்று எரிவு
நெஞ்செரிப்பு
குன்மம்
பித்த குன்மம்
சிறுநீர் எரிச்சல்
சிறுநீர் கடுப்பு
வாயில் நீர் சுரத்தல்
உள் வறட்சி
ஈரல் வறட்சி
வெள்ளை
காது இரைச்சல்
கை கால் குடைச்சல்
தொண்டைக்கட்டு
நீர்கட்டு
உள்ளுறுக்கி
தலை வாதம்
மயக்கம்
எலும்புக் காய்ச்சல்
இருமல்
தாகம்
உடல் சொறி
காய்ச்சல்
வயிற்று வலி
பொருமல்
சிரங்கு
காமாலை
உடல் சூடு
திரிகடுகம்
சுக்கு (தோய் நீக்கியது - தோல் புற நஞ்சாகும்)
மிளகு
திப்பிலி
மூன்றும் சம அளவு பொடித்துக் கலந்து வைக்கவும்.
திரிபலா
கடுக்காய்
நெல்லிக்காய்
தான்றிக்காய்
மூன்றும் (மூன்றும் கொட்டை நீக்கியது - அக நஞ்சு) அளவு பொடித்துக் கலந்து வைக்கவும்.
No comments:
Post a Comment