நிலவேம்புக் குடிநீர்/NILAVEMBU KUDINEER
தேவையானப் பொருட்கள்
1. நிலவேம்பு (Andrograhis Paniculata)
2. வெட்டிவேர் (Chrysopogon zizanioides)
3. விலாமிச்சை வேர் (Plectranthus Vettiveroides)
4. சந்தனம் (Santalum album)
5. கோரைக்கிழங்கு (Cyperus rotundus)
6. பேய்ப்புடல் (Trichosanthes Cucumerina)
7. பற்படாகம் (Mollugo cerviana)
8. சுக்கு (Zingiber officinale - Dried)
9. மிளகு (Piper Nigrum)
மேற்குறிப்பிட்ட 9 பொருட்கள் ஒவ்வொன்னையும் சம அளவு பொடித்து கலந்து எடுத்துக் கொள்ளவேண்டும்.
இதன் பொடியுடன் 8 மடங்கு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து, அதை 4 மடங்காகச் சுண்ட வைத்து ஆற விட்டு இளஞ்சூட்டில் அருந்த வேண்டும்.
(எடுத்துக்காட்டாக, 5 கிராம் நிலவேம்புக் குடிநீர்ப் பொடியோடு 200 மில்லி தண்ணி சேர்த்து, அது 50 மில்லியாகச் சுண்ட வைக்கவும்.)
அருந்தும் முறை
நிலவேம்புக் குடிநீர, இளஞ்சூடாக குடிப்பதுதான் நல்லது. அதுவும் தயாரித்த 3 மணி நேரத்தில் குடித்து விட வேண்டும்.
தயார் செய்த நிலவேம்புக் குடிநீரை, மறுநாள் வரை ஃபிரிட்சில் வைத்துக் குடிக்கக் கூடாது.
அளவு
காலையும் இரவும் உணவுக்கு முன் 30 மில்லி நிலவேம்புக் குடிநீரை அருந்தவும்.
வயதைப் பொருத்து நிலவேம்புக் குடிநீரை ஒரு நாளைக்கு 10 மி.லி முதல் 50 மி.லி வரை குடிக்கலாம்.
குழந்தைகளும், கர்ப்பிணிப் பெண்களும் மருத்துவரின் ஆலோசனையப் பெற்று குடிக்கவும்.
தீரும் நோய்கள் : அனைத்து விதமானக் காய்ச்சல்.
No comments:
Post a Comment