Looking For Anything Specific?

test

Post Top Ad

Your Ad Spot

Saturday, December 18, 2021

Questions for United States Medical Licensing Examination (USMLE) - Step 1


23 வயதான ஒரு பெண், மாரத்தான் போட்டியின் இறுதிக் கோட்டில், சரிந்து விழுந்த நிமிடங்களுக்குப் பிறகு, மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகிறார். அவர் சுயநினைவை இழக்கவில்லை. மற்றும் அவர் விழிப்புடனும் இணக்கமாகவும் உள்ளார். மேலும் அவருக்குத் தலைச்சுற்றலோடு தலை லேசாக உள்ளது போல் உணர்கிறார். தலைவலியோ அல்லது குமட்டல் போன்ற அறிகுறிகளோ இல்லை. அவருக்கு முந்தைய மருத்துவ வரலாறும் ஏதும் இல்லை. அவர் மருந்துகள் எதுவும் எடுத்துக்கொள்வதும் இல்லை. அவரது நெஞ்சகத் துடிப்பு 120/நிமிடம்மற்றும் குருதி அழுத்தம் 85/50 mm Hg ஆக உள்ளது. மற்ற அறிகுறிகள் இயல்பாக உள்ளன. அவரை  ஒரு கட்டிலில் படுக்கவைத்து, கால்கள் உயர்த்தப்பட்டு, 0.9% உவர் நீர்மம் உட்செலுத்தப்படுகிறது. முப்பது நிமிடங்களுக்குப் பிறகுஅவரது நெஞ்சகத் துடிப்பு 70/நிமிடமாகவும்இரத்த அழுத்தம் 110/70mm Hg ஆக உள்ளது. அவர் பின்னர் நன்றாக உணர்கிறார்உண்ணத் துவங்குகிறார் 



இந்த நோயாளியின் நிலையைப்,   பின்வருவனவற்றுள், எது சிறப்பாக உணர்த்துகிறது?


அ. தன்னியக்கச் செயலிழப்பு (Autonomic dysfunction)

 

ஆ. பொட்டாசியம் / வெடியுப்புக் குறைவு (Hypokalemia)

 

இ. சோடியம் / உப்புக் குறைவு  (Hyponatremia)

 

ஈ.  நிமிர்நிலைக் குறைக்குருதியழுத்தம் (Orthostatic hypotension)

 

உ. நெஞ்சகத்தசை அழற்சி (Myocardial inflammation)

 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot